Sunday, January 9, 2011

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே



சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?

கண்ணாடி கன்னங்கள் காண்கின்ற வேலையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா

பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே

ஆடும் கொடிய நகங்களும்
அசைந்து வரும் நேரம் உன்
அழகு முகம் கண்டுக்கொண்டால்
அன்பு கொண்டு மாறும்!

செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?

மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?


Mahadevi - Singara Punnagai Kannara Kandale Song and Lyrics

Chandrababu, Kannadasan, M.G.Ramachandran, M.S.Viswanathan, Maruthakasi, O.A.K. Thevar, P.S.Veerappa, P.Susheela, Pattukottai Kalyanasundar..., Ramaiya Das, Sairam, Savitri, Sundar Rao Nadkarni, T.K. Ramamoorthy, T.P. Muthulakshmi
Kakka KakkaM S Rajeshwari
Kanmoodum VazhiyilA M Raja, P Susheela
Kurukku VazhiyilT M SoundarrajanPattukottai Kalyanasundram
Maanam Ondre
Singara Punnagai Kannara
Thaanthanaa Paatu PadanumChandrababu, RathnamalaT N Ramiah Das
Thaayathu ThaayathuT M SoundarrajanPattukottai Kalyanasundram
Un Thirumugathai

No comments:

Post a Comment