அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்க விடும் ஆளை
இந்த ஆபத்தை நாடி வரும் மாவீரன்
பாரிலே யாரடி
அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்க விடும் ஆளை
கும்மாளம் போடும் உன் காளை
இது கொட்டம் அடங்குமடி நாளை
அங்கே கூசாமல் போராடும் மாவீரனை
நேரிலே பாரடி
கும்மாளம் போடும் உன் காளை
இது கொட்டம் அடங்குமடி நாளை
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்னக்கண்டு
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்னக்கண்டு
வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு
மாட்டை பிடிக்க வந்து ஓட்டம பிடித்ததுண்டு
மாட்டை பிடிக்க வந்து ஓட்டம பிடித்ததுண்டு ஒ ஒ
மாட்டை பிடிக்க வந்து ஓட்டம பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே ஆகாது
இது ஆவேசம் கொண்டாலே பொல்லாது
அஞ்சாத சிங்கம் என்ன காளை
இது பஞ்சா பறக்க விடும் ஆளை
வேலேந்தும் காளை எல்லாம் உன் வேல் விழியால் சொக்கிடுவார்
வேந்தை போல் துள்ளிடுவார் வெற்றி அடைந்திடுவார்
வேந்தை போல் துள்ளிடுவார் வெற்றி அடைந்திடுவார்
கண்ணாலம் பண்ணாத ஆண்பிள்ளை
உனக்கு கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை
அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்க விடும் ஆளை
இந்த ஆபத்தை நாடி வரும் மாவீரன்
பாரிலே யாரடி
அஞ்சாத சிங்கம் என்ன காளை
Veera Pandiya Kattabomman - Anjatha Singam En kalai Song, Lyrics and Video