Sunday, February 13, 2011

எனக்கு தினமும் காதலர் தினம் தான் !!



அன்பே,

இப்படித்தானே உலகம் விழிக்கிறது அன்பானவர்களை.
நான் மட்டும் விதி விளக்கா என்ன ?

அழைக்கின்றேன் அன்பே என்று.

ஹ்ம்.

இன்று காதலர் தினம்.
இன்று மட்டும் ஏன்?

எத்தனை காதலன்கள் !
எத்தனை காதலிகள் !
பூவைக்காக,
பூ வைக்கின்றவனுக்காக,
இன்று மட்டும் பூவை தேடுகிறார்களே?

இவர்கள் அனைவரும்
ஒரு நாள் காதலிப்பவர்களா ?
இதனால் தானா
இன்று மட்டும் காதலர் தினமா?

இல்லை மலர் உதிரும் வரை காதலிப்பவர்களா ?

என் மனம் மட்டும்
ஏன் மலரை வாங்க மறுக்கிறது ?
ஏன் உலகத்தோடு ஒத்து போக கூடாது?

என் அன்பு, என் அருகில் இல்லை என்பதாலா ?
இல்லை!! நான் சற்று விதி விளக்கா?

மலர் கொடுத்தால் தான்
மங்கைக்கு புரியுமா என்ன?

ஆனால்
என்னவளுக்கு
எல்லாமே புரியும்
தினமும் காதலிக்கிறேன் என்று

இருந்தாலும்
என்னவள் மனம்
ஏங்குகிறது இன்று
என்ன அனுப்புவார்
என் அன்பர் என்று

கண்ணே !
கண்ணை கண்ணே தான் என்று அழைக்க வேண்டும்.

காதலர் தினம் இன்று மட்டுமல்ல !
காதல் மனதில் உள்ளவரை
தினமும் காதலர் தினம் தான்!

உனக்கு புரியும்
உன் உள்ளத்துக்கு புரியும்
உன் காதல் அளவும்
என் காதல் அளவும்

கலங்காதே!
கண்ணே கலங்காதே!

நமக்கு தினமும் காதலர் தினம் தான்.
நன் நம்பிக்கை வை
இன்பம் எங்கே எங்கே
என்று தேடினால்
அது இங்கே இங்கே இன்று தான்
இருக்க வேண்டும்

நம்மிடத்தில் உண்டு
நல் இன்பம்
நனைய வேண்டும்
நாள்தோறும்

அன்புடன்
தினமும் நேசிக்கும் அன்பன்

குறிப்பு: எங்கு தேடினாலும் இந்த வரிகள் கிடைக்காது. கிடைத்தால் அது இன்பமிங்கே சைட்டில் கிடைக்கலாம்.