இன்பமிங்கே இணையதளத்தில் ஒரு நண்பர் இந்த பாடல் வரிகள் தேடி வந்திருந்தார். அந்த நண்பருக்கு நன்றி.
என்ன ஒரு இனிமையான பாடல். முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன்.
ஆங்கிலத்தில் இருந்தது. நான் இந்த பட்டை கேட்டு சொக்கி போய் தமிழில் இங்கே தந்துள்ளேன்.
என் கவிதைப் புத்தகம் எங்கே
அது களவு போனது எங்கே
அதை தேடியே நான் வாடினேன்
என் கண்ணில் உன் முகம் தானே
என் நெஞ்சில் உன் உயிர் தானே
அதைத்தானடி தினம் நெய்கிறேன்
இதயம் துடித்தும் நான் இறந்தேன்
உன்னை நினைக்கும் நொடியெலாம் பிறந்தேன்
பூமித்தாண்டியும் வருவேன்
உன் பாத சுவட்டினில் புதைவேன்
காற்றிலே காற்றிலே உந்தன் வாசனை
நான் அதை சேமிக்க என்ன யோசனை
என் கவிதைப் புத்தகம் எங்கே
அது களவு போனது எங்கே
அதை தேடியே நான் வாடினேன்
நான் மட்டும் தனியே நின்று யுகம் பார்க்கிறேன்
நான் சென்ற இடங்களில் உந்தன் முகம் பார்க்கிறேன்
விடியாத வானிலும் ஏறி உனை தேடினேன்
விடை ஏதும் தென்படவில்லை தடுமாறினேன்
மரம கொத்திப் பறவையைப் போலே மனம் கொத்தினாய்
மரம சுற்றும் கொடியாய் என்னை நீ சுற்றினாய்
வேருக்கும் ஏனோ நீ தான் தீ ஊற்றினாய்
ஏனடி ஏனடி இந்த வன்முறை
காதலில் மட்டும் தான் நூறு செய்முறை
என் கவிதைப் புத்தகம் எங்கே
அது களவு போனது எங்கே
அதை தேடியே நான் வாடினேன்
அணில் போல எந்தன் நெஞ்சு அலைப்பாயுதே
அழகான உன்னைத்தானே அது தேடுதே
நீ சென்ற கால் தடம் தேடி குளிர் காயுதே
நீ தந்த காதலில் தின்று உயிர் வாழுதே
நீ போன திசைதான் எதுவோ சொல்வாயடி
மனமில்லை என்றால் என்னை கொல்வாயடி
எல்லாமே கனவாய் இருந்தால் சுகம்தானடி
ராவேல்லாம் நெஞ்சிலே நூறு யோசனை
நாளெல்லாம் உணர்கிறேன் உந்தன் வாசனை
என் கவிதைப் புத்தகம் எங்கே
அது களவு போனது எங்கே
அதை தேடியே நான் வாடினேன்
என் கண்ணில் உன் முகம் தானே
என் நெஞ்சில் உன் உயிர் தானே
அதைத்தானடி தினம் நெய்கிறேன்
இதயம் துடித்தும் நான் இறந்தேன்
உன்னை நினைக்கும் நொடியெலாம் பிறந்தேன்
பூமித்தாண்டியும் வருவேன்
உன் பாத சுவட்டினில் புதைவேன்
காற்றிலே காற்றிலே உந்தன் வாசனை
நான் அதை சேமிக்க என்ன யோசனை
Vaigai - En Kavithai Puthagam Engey Lyrics, Song and Video