Sunday, January 9, 2011

சொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்



சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
நில்லையோ நேரில் வந்து
நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

ஊஞ்சல மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேலை
சொல்லாயோ வாய் திறந்து போதுமிங்கு
கண்ணன் கண்ணா உன் பொல்லாத லீலை
சொல்லாயோ வாய் திறந்து

ஆகாய சூரியன் மேற்க்கினில் சாய
ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேனி வாடா
தாமதம் இனி ஏனோ இரு மேனி கூட

அந்தி வரும் தென்றல் சுடும்
ஓர் விரகம் விரகம் எழும்
என்று வரும் இன்பம் சுகம்
ஊன உருகும் உருகும் தினம்
நாள் முழுதும் ஊர் பொழுதும்
உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்

சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
ஊஞ்சல மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேலை
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து

நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது
கூராதோ நான் படும் பாடுகள் நூறு
நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட
ஏழையை விடலாமா இது போல வாட
வெள்ளி நிற வெண்ணிலவில் வேன்குழலில் இசையும் வரும்
நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் இலகும்
இந்நேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து

சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து
ஊஞ்சல மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேலை
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திறந்து

Mogamul - Sollayo Vai Thiranthu Varthai Ondru Song, Lyrics and video


Nadodi Thendral - Maniye Manikkuyile Song, Lyrics and Video

A. Dharmambal, Abhisheik, Archana Joklikar, Delhi Ganesh, Gnanarajasekharan, Ilaiyaraaja, Kamala kamesh, Krishnamurthy, Lenin, Nedumudi Venu, Sangeetha Krish, Sanny Joseph, Thangarbachan, V.T. Vijayan, Vaali
Kamalam PaathaK J Jesudass
Nenje Gurunatharin - 1Illayaraja
Nenje Gurunatharin - 2Illayaraja
Sangeetha NaanamK J Jesudass
Sollaayo Vaaithiranthu - MaleIllayaraja
Sollayo Vai Thiranthu - FemaleIllayaraja

No comments:

Post a Comment