Tuesday, April 5, 2011

நண்பன் - யாவரும் நண்பர்கள் இல்லை



அன்புள்ளம் கொண்டவர்களே,

என்னுடைய கருத்து நண்பன் ஒருவனே. அதாவது ஒரு நபர் மட்டுமே நண்பனாக இருக்க முடியும்.

எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று ஒருவன் சொன்னால் அது பொய். அதில் உண்மை இருக்காது.

என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்.

தோழன் வேறு, உயிர்த் தோழன் வேறா? தோழன் என்று சொல்லுங்கள்.
உண்மை வேறு, சத்தியமான உண்மை வேறா? உண்மை என்று சொல்லுங்கள்.

என்னுடைய தாய் என்றுதானே சொல்லுகிறோம். தாய்கள் என்று சொல்லுவதில்லையே.

அப்படித்தான் நண்பன் ஒருவனே.

உண்மை ஒருவரிடம் மட்டுமே சொல்ல நினைப்பவர்கள் மனிதர்கள்.

சொல்லலாம் கடவுளிடம்,
சொல்லலாம் அன்னையிடம்,
சொல்லலாம் தந்தையிடம்,
சொல்லலாம் மனைவியிடம்,
சொல்லலாம் நண்பனிடம்,

இவை எல்லாமே ஒருமைதான்.

சொல்லலாம் சகோதரனிடம் (ஒரு சகோதரன் மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் தலை உருளும் ஒரு நாளில்)
சொல்லலாம் சகோதரியிடம் (ஒரு சகோதரி மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் தலை உருளும்)
சொல்லலாம் காதலியிடம் (ஒரு காதலி மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் பல் உடையும்),

பலரிடம் ஒருவன் உண்மை சொல்ல நினைத்தால் அவனிடம் உண்மையில்லை.

தேடிப் பார்த்தால், உங்களால் உங்கள் நண்பனை தேடுவது கடினம். இது தான் உண்மை நிலை.
அப்படியே தேடி போய் கண்டுபிடித்தாலும் அது பால்ய சிநேகிதத்தில் தான் முடியும்.

கல்லூரி பருவ நண்பர்கள் (அனைவரும் நண்பரல்ல) பருவ கால நண்பர்கள். பாதியில் மறைந்து விடுவார்கள்.

பணி பார்க்குமிடத்து நண்பர்களும் (அனைவரும் நண்பரல்ல) அப்படித்தான். பணி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

காலை மட்டும் இல்லை,
மனதையும் வாரி விட்டு போகும் நண்பர்களை
வாழ்க்கையில் சந்திப்பீர்கள்.
உங்களைப் பற்றி பிறரிடம் தூற்றும், நய வஞ்சக நண்பர்களை காணுவீர்கள்

மனது வருடும். இவனையா என் நண்பன் என்றேன் என்று.
ஆனால் தேடுங்கள். பின்னால் சென்று தேட வேண்டுமே தவிர நிகழ் காலத்தில் இருக்காதீர்கள்.

நண்பன் - நல்ல பண்புடையவன் - கடினம் இப்போது தேடித் பார்த்தால்

நான் இன்னும் தேடுகிறேன்
இள வயதில் தொலைத்த(மறந்த) என் நண்பனை.
குடியில் பழக்கமான நண்பனை அல்ல.
என் குடிலில் பழக்கமானவனை

ஏன் வேகம் என்று கேட்கலாம்.

தொடருவேன் நண்பர்களின் நயவஞ்சகத்தை கேட்கும் போது.