Tuesday, May 10, 2011

எத்தனை பெண் கவிகர்கள் இருக்கிறார்கள் தமிழ் திரை உலகத்தில்?

எத்தனை பெண் கவிகர்கள் இருக்கிறார்கள் தமிழ் திரை உலகத்தில்?

பல பாடல்களை கேட்டிருக்கிறேன்
பல பாடல்கள் பெண்கள் பாடுகின்றனர்
எழுதியதோ ஆண் வர்க்கம் என்று
எல்லோர்க்கும் தெரியும்

அவர்கள் அன்றி ஏதும் அசையாது
அவர்கள் அன்றி உலகம் இல்லை
அவர்கள் ..... அவர்கள் ..... யார் அந்த அவர்கள்?

ஹ்ம்ம்

உண்மையில் புலவர்கள் பொய்யர்களா?

ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே ...

உண்மையை ஏன் எழுத
வெட்கம் ?

இந்த பாடல் ஒரு பெண்மணி எழுதி
இனிமையாக பாடியிருந்தால்
என்றும் ஒப்புக்கொள்வேன்

ஆனால் இன்று என்னால்
ஒப்புக்கொள்ள முடியவில்லை

அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான் தானே ...?
என்ன ஒரு மமதை ஒரு பெண்ணிடம் ?

ஆணினமே மடியும் அந்த ஆலிலங் குழியிடம்
எனும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது

மடி - எத்தனை அர்த்தம் ?
மடி - அன்னை மடியில் துயில். போதாதா என்ன ?
மடி - நீ உனை உணரவில்லை எனில் (செத்து மடி)
மடி - அவளின் மடி (ஏன் இந்த மடி மட்டும் போதை உனக்கு?) மஞ்சள் ? (ஒப்புக்கொள்ள மாட்டேன்)
மடி - அன்னை மடி தவிர பிறரை நுகரும் போது (யாரும் உண்மையில் உண்டா என்ன?)

நித்தமும்
நினைப்பேன் மடியினை
நினைப்பேன் அன்னையின் மடியினை


Guru