என் அன்பு தங்கைக்காக இந்த பாடல்
காவேரி ஆத்தங்கரை ஓரம்
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்
காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்
ஒரு அண்ணன்காரன் தங்கச்சி மேல
உசுர வெச்சானம்
அது உசுரும் இல்ல உசுருக்கு மேல
ஒசத்தி என்றானாம்
இது தாண்ட மனுஷ வாழ்கையின்
பண்பாடு
இதை ஊருக்கெல்லாம் உரக்க சொல்லி
நீ பாடு நீ பாடு
காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்
ஆயிரம் ஜென்மம் எடுத்தும் தீராது
இந்த அண்ணன் தங்கை பாசம்
என்றும் மாறாது
ஓ ஓ ..
சூரிய தீபம் மண்ணில் சாயாது
இந்த சொக்கத்தங்கம் தீ பட்டாலும் கருகாது
அவன் காலில் முள்ளு குத்தினால்
இவளுக்கு வலிக்குமடா
இவள் கண்ணில் தூசு விழுந்தா
அவனுக்கு உறுத்துமடா
இது அம்மனுக்கும் தெரியும்
அந்த அய்யனுக்கும் தெரியும்
இந்த அருவிக்கும் தான் தெரியும்
அந்த குருவிக்கும் எல்லாம் புரியும்
இந்த ரத்த பாசம் தானா துடிக்கும்
சதை ஆடும் தெரியாதா
காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்
ஊருல தென்னந்தோப்பு ஏராளம்
எங்க உள்ளம் காட்டும் பாசம்
இங்கே தாராளம்
ஹோய்
ஆத்துல அயிர மீனு விளையாடும்
இந்த அண்ணன் தங்கை பேரச்சொல்லி
நதி ஓடும
இலை தாங்கும் கிளையை போலவே
அவளுக்கு இவன் இருப்பான்
வெயில் தாங்கும் குடை போலவே
இவனுக்கு அவள் இருப்பா
இவ கண்ணுகொரு இமையாய்
அவன் காவலுக்கு இருப்பான்
அவ காலையில முழிச்சா
இவன் கண்ணுல தான் முழிப்பா
இந்த அண்ணன் தங்கை பாச கதை போல்
வேறேதும் கிடையாதே
காவேரி ஆத்தங்கரை ஓரம
கருங்கல்லும் பூ பூக்கும் கிராமம்
ஒரு அண்ணன்காரன் தங்கச்சி மேல
உசுர வெச்சானம்
அது உசுரும் இல்ல உசுருக்கு மேல
ஒசத்தி என்றானாம்
இது தாண்ட மனுஷ வாழ்கையின்
பண்பாடு
இதை ஊருக்கெல்லாம் உரக்க சொல்லி
நீ பாடு நீ பாடு
- அன்பு அண்ணன் அசோக்
Kannukku Kannaga - Kaveri aathangarai Ooram Song, Lyrics and Video