Wednesday, June 29, 2011
உசுரத் திருடி போறா ஒருத்தி
உசுரத் திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
என் உசுரத் திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
எனக்குத்தான் என்ன ஆச்சு
மனசுக்குள் நூறாள் பேச்சு
தெசை எல்லாம் ஒண்ணா போச்சுது
முழிச்சாடும் கண்ணாமூச்சி
உசுர திருடி போறான் ஒருத்தன்
என் உறக்கம் கெடுத்த பாசக் கிறுக்கன்
அல்லிப்பூ மாராலே ஆளக்கொன்னு போறவளே
மனப்பாடம் செஞ்சதெல்லாம் மறந்து போகுதே
ஆடைக்குள்ள தோடையில அரும்பிநில்ல நீயும் வந்தால்
வெளியூரு போனா வெட்கம் உள்ளூர் வருமே
முழிக்கின்ற நேரங்கள்
முன்னாலே நீ வேண்டும்
எப்போதும் உன்னை படிக்க
அன்புக்கு வயிறில்லை
ஆனாலும் பசி கொள்ளும்
அணுவெல்லாம் துடி துடிக்க
கொலைவாள் கொண்ட அழகே அழகே
குருதியில் காதல் கலந்தாயே
இன்பமிங்கே
உசுரத் திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
வெந்த கனறு கையில
உன் நெனப்பில் வெரலறுத்தேன்
விடிஞ்சாலும் கனவுக்குள்ள முத்தமிடுவேன்
மூக்குத்தி சுர போல உன்னோடு நானிருபேன்
முடியாம போனா நானும் மூச்ச விடுவேன்
துணையாக நீ வந்தால் தோல் மீது சாய்வேனே
இணையான தெய்வம் இல்லையே
கடல் மட்டம் மேலேறி
உடல் மூடி போனாலும்
அணையாது காதல் ஒளியே
நெடுநாள் காதல் நிலை கொன்டாடும்
திருநாள் ஒரு நாள் வந்திடுமே
உசுரத் திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
என் உசுரத் திருடி போறா ஒருத்தி
அட உள்ளுக்குள்ள வெளக்க பொறுத்தி
- கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment