Monday, May 23, 2011

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

உன் மூச்சு காத்து வந்துதான்
என் மூச்சு காத்த தீண்டுதே
வழியெல்லாம் வானவில்ல தருதே

நீ என்ன பாக்கும் போதிலும்
நான் உன்ன பாக்கும் போதிலும்
நெஞ்சோடு கோடி மின்னல் வருதே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

இன்பமிங்கே

என்னென்னவோ ஆசைகள் உள்ளுக்குள்ளே சேர்க்குற
அத்தனையும் சொல்லிவிட தனிமைய கேக்குற
அறுபட்ட கோழிய போல் சுத்தி சுத்தி துடிச்சேனே
கண்ணுமுழி மூக்கு எல்லாம் மொத்தமாக வேர்த்தேனே
ஒரு வரத்தை பேச நெனைக்கிறேன் எதனாலோ தவிசி நிக்கிறேன்
உதட்டோடு ஒளிச்சி வைக்கிறேன் ஆசையத்தானே

எதிர் காத்தில் ஆத்தை போலவே
உன்னை பாத்து சரிஞ்சு நிக்குறேன்
உன் காதல் வரத்தை கேட்கிறேன் தினம் தினம் தினம் நானே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

பென்மனசு ஆழமுன்னு சொன்னவங்க யாருங்க
உண்மையிலே ஆண்மன்சு அதைவிட ஆழங்க
என்ன்விட்டு தள்ளி நின்னா விட்டு விட மாட்டேனே
உன் மனசு தல்லையின்னா தட்டி தட்டி திறப்பேனே
சொல்லாத காதல் என்பது செல்லாத காச போலது
சொன்னாதான் காதல் வேகத்தில் மழை வந்து குதிக்கும்
மலைமேலே பூக்கும் பூவத்தன் மறச்சாலும் வாசம் தெரியுமே
மனசோரம் காதல் வந்துட்டா கண்ணில் அது தெரியும்

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

உன் மூச்சு காத்து வந்துதான்
என் மூச்சு காத்து தீண்டுதே
வழியெல்லாம் வானவில்ல தருதே

நீ என்ன பாக்கும் போதிலும்
நான் உன்ன பாக்கும் போதிலும்
நெஞ்சோடு கோடி மின்னல் வருதே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

இனிமையான பாடல் மைதானம் படத்திலிருந்து.

- குருவின் இன்பமிங்கே

Kadhal Oru
Kanava Nesama
Kandom Kandom
Love Theme
Maithaanam Maidhanam

No comments:

Post a Comment