Wednesday, June 29, 2011
யாரடிச்சி அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை
யாரடிச்சி அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை
அத சொல்லி சொல்லி அழுதிடத்தான்
இல்லையடா வார்த்தை
விரும்பி செய்வதில்லை யாரும் பிழைகள
காற்றும் விடுவதில்லை உதிரும் இலைகள
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரோ
ஆரி ஆரிராராரோ
சர்க்கரை உதிரும் வார்தைகள
மௌனம் கொன்றுவிட்டு போனதடா
சேமித்து வாய்த்த கனவுகளும்
குப்பையில் பொருளாய் ஆனதடா
நாணயத்தின் இரண்டு பக்கம்
பார்த்துக்கொள்ள அட கூடாதோ
காயம் கொண்ட விழிகளுமே
இதயம் கொண்டு அட தேடாதோ
பயணத்தின்போது கண்கள் மூடிக் கெடக்க
காதல் என்ன மயில் கல்லோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரோ
ஆரி ஆரிராராரோ
இன்பமிங்கே
யாரடிச்சி அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை
அத சொல்லி சொல்லி அழுதிடத்தான்
இல்லையடா வார்த்தை
தொலைந்த பொம்மைக்கு விளையாட
குழந்தை ஒன்று கிடைத்திடுமோ
இடைவெளி கொஞ்சம் இருப்பதனால்
இதயம் முகத்தினை மறந்திடுமோ
வழி நெடுக தவமிருக்கும்
மரத்தடி போதும் குடியிருக்க
வீடிருக்க தாயிருக்க
வீதியில் திரிந்தால் யார் பொறுக்க
பொய்யான வாழ்க்கை போதுமென்றா நீயும்
முகவரி தொலைதுக்கொண்டாய்
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரோ
ஆரி ஆரிராராரோ
யாரடிச்சி அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை
அத சொல்லி சொல்லி அழுதிடத்தான்
இல்லையடா வார்த்தை
விரும்பி செய்வதில்லை யாரும் பிழைகள
காற்றும் விடுவதில்லை உதிரும் இலைகள
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரோ
ஆரி ஆரிராராரோ
ஆரி ஆரிராராரோ
யாரடிச்சி அழுகிறதோ உன்னுடைய வாழ்க்கை
அத சொல்லி சொல்லி அழுதிடத்தான்
இல்லையடா வார்த்தை
-கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment