பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்

உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே
உண்மை அன்பால் உறவை வளர்த்துத் தந்தவள் பெண்தானே
குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே - அந்தப் பெண்ணே உலகின் கண் தானே
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்
உடையைப் பார்த்து நடையைப் பார்த்து எடையைப் போடாதே
சடையைப் பார்த்து இடையைப் பார்த்து கடையை விரிக்கதே
அட போயா வாலை ஆட்டாதே - உங்க போக்கிரித் தனத்தைக் காட்டாதே
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்
சோளக்காட்டு பொம்மை போலே சூட்டை போட்டுக்கிட்டு
சோலி ரவிக்கை சேலைத் துணியில் சில்க்கை மாட்டிக்கிட்டு
இப்ப எங்களை சுத்தும் ஏமாளி - நீ
இச்பெட் ராஜா கோமாளி
தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்
பாலன்னம் பாலன்னம் பழகும் விதத்தில் பாலன்னம்
| ||||||
No comments:
Post a Comment