தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
மையாடும் பூவிழியில்
மானாடும் நாடகத்தை
மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
நீ என்னை தேடுவதும்
காணாமல் வாடுவதும்
கடவுள் தந்த காதலடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
பூந்தென்றல் ஊரெங்கும்
உன் முகத்தை தேடி
புது வீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையை
பார்த்தாக வேண்டுமென்று
நூறு கண்கள் வாடுதடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தாயாக நான் மாறி
தங்க மகள் வாழ
தந்து விட்டேன் என்னையடி வாடி
யாரோடு யார் என்று
காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியுமடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
Nilave Nee Satchi - Thai Maatha Pongal Song, Video and lyrics
Chaubikaan, Jaishankar, K.R. Vijaya, M.S.Viswanathan, Nagesh, P. Madhavan | |||||||||||||||
| |||||||||||||||
No comments:
Post a Comment