எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
இந்த வயசில்தானே எனக்கு
விவரம் புரியுது நீங்க
ஏற இறங்கப் பார்க்கும்போது
விளக்கம் தெரியுது
எங்க வீட்டு ராஜாவுக்கு
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவமேறி
காதல் அரும்புது
சேலை கட்டிய கருப்பு பல்லக்கு
சிரிக்கும் சிரிப்பு அழகு உன்
சிரிக்கும் வான முகத்தைப் பார்த்து
இருட்டில் மறையும் நிலவு
கோலம் போட்ட இதழின் மீது
கூடக் குறைய பழகு
கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய
குளிர வேண்டும் இரவு
குளிர வேண்டும் இரவு
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
மாலை போட்ட நாளில் இருந்து
மனசு துடிக்கும் துடிப்பு
மதியமில்லை இரவுமில்லை
தினமும் உங்க நெனப்பு
காலம் தாண்டி கிடைக்கும்போது
காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெள்ளம் கசந்து போகும்
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
பழுத்து வந்த பழத்தைப் போல
பருவம் இன்று விஜயம்
பார்த்து நீங்கள் பழக வேண்டும்
தெரியும் உங்கள் விஷயம்
துன்பம் போல தோன்றினாலும்
இன்பம் அங்கு அதிகம்
இன்பம் துன்பம் எதுவென்றாலும்
எனக்கு நீங்கள் உலகம்
எனக்கு நீங்கள் உலகம்
எங்க வீட்டு ராணிக்கிப்போ
இளமை திரும்புது வயது
ஏற ஏற பருவம் ஏறி
காதல் அரும்புது
Grahaprevesam - Enga Veettu Ranikkippo Ilamai Thirumbuthu Song, Lyrics and Video
D. Yoganand, K.R. Vijaya, M.R.R. Vasu, M.S.Viswanathan, Sivaji Ganesan, T.S.Muthusami, Vietnam Veedu Sundaram | |||||||||||||||
| |||||||||||||||
No comments:
Post a Comment