திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
உலகினை பாய் போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா அன்று
இந்திரா வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே அவள்
கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ
ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ
மறந்தாயோ நீயே
உன் தெய்வ முனிவரை காப்பதற்கென்றே
வருவாயோ நீயே
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
அந்த ரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே
கணை கொடுத்திட வேண்டும் அரக்கியின்
வாழ்வை அழிதிடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து
வாராய் திருமாலே உன்
அன்பரை எல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
ரதங்கள் படைகள் என எழுந்து
இன்று வீறுடன் வாருங்கள்
நாரயனேனும் தலைவன் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடிவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள் இனி
வருவது வரட்டும் முடிவினை பார்ப்போமே
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜகநாதா
வருவாய் திருமாலே
துணை தருவாய் பெருமாளே
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
Swami Ayyappan - Thiruppar Kadalil Palli Kondaye Song, Lyrics and Video
A.V.M. Rajan, G. Devarajan, Gemini Ganesan, Kannadasan, Lakshmi, P. Subramaniam, Srividya, Thikkurissy Sukumaran Nai... | ||||||
| ||||||
No comments:
Post a Comment