Sunday, January 16, 2011
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கி கொண்டாயோ
கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ
கிண்டி ரேசிலே சுத்தி கிறுகிறுத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
பூமிக்குள் புகுந்து புதையல் ஆனாயோ
புன்னகையாய் பெண் மேல் தூங்குகின்றாயோ
பூமிக்குள் புகுந்து புதையல் ஆனாயோ
புன்னகையாய் பெண் மேல் தூங்குகின்றாயோ
சாமிகள் அடிதனில் சரண் புகுந்தாயோ
சாமிகள் அடிதனில் சரண் புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இறக்கம் உள்ளவரிடம் இருக்காத பணம்தானே
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ
சூடம் சாம்ப்ரானியாய் புகைந்து போனாயோ
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே
Panam -Panathai Enge Theduven Song, Lyrics and Video
Labels:
Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment