Saturday, April 9, 2011

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை

என் அம்முவுக்காக புதுக் கவிதை விடும் தூது !!!

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை மனம்
துவழாமல் இன்னும் தேடுகிறேன்
தனிமையில் வாடும் என் அன்புக்கு
தைரியம் சொல்ல
தன்னம்பிக்கை சொல்ல வேண்டும்
தயங்கும் போதெல்லாம்

துளியும் புரியவில்லை
தூதாக யாரை அனுப்ப என்று
துயில் கொள்ள மாட்டாள்
துணை நான் இருக்கிறேன் எனும் வரை
தூதுவனை தேடுகிறேன்
துயில் கொள்ளாமல் நானும்

கிடைக்கவில்லை தூதன்!
கிடைக்குமா என தேடினேன்
கண் சிவக்கும் வரை வலை பூக்களில்!
கிடைக்குமா என தேடினேன்
கண்ணதாசனின் கவிகளில்!
கிடைக்குமா என தேடினேன்
கவிஞர்களின் படைப்புகளில்
கிடைக்குமா என கூவினேன்
குறு பறவைகளிடம்

தேடலில் கண்டேன் விடை!
தென்றலை தூது விடு என்று.
தென்றலை தூது விட்டால்
திசை மாறாமல் போய்
திண்ணமாக எனை நினைக்குகும்
திரு உருவிடம் போய் சொல்லுமா?
திக்கெல்லாம் துயிலாமல் இருப்பது என்னவள் மட்டுமா என்ன?
தென்றல் திருவிளையாடல் செய்து விட்டால்?

கிட்டியது விடை!
காக்கையை தூது விடு என்று!
கா கா என்று தானே சொல்லும் காக்கை
கண்ணே கண்ணே என்று சொல்லுமா?
காவியமே காவியமே
கட்டழகன் கண் இமைக்காமல்
காவியம் படைக்கத்தனே நினைக்கிறான்
காரணம் புரியாமல்
கோபம் ஏன்?
கொட்டியது இப்படி இருக்க
காக்கை கா கா என்று
கானம் பாடினால் நம்புவாளா கோல மயில்?
கிழவியிடம் திருடிய வடையை
கீழே போட்டாய் உனை பிறர் பகழ்ந்த போது
காக்கை வேண்டாம்

புரட்டி புரட்டி படித்தேன்
புறாவை தூது விடலாம் என்று!
புரியுமா நான் ஒருவன் தான்
புறாவிடம் தூது சொன்னேன் என்று!
பலர் சொல்லி இருந்தால்?
புலம்பிவிடாத பிறர் கூறியதை என்
புன்னகை அரசியிடம்?
புன்னகையை தொலைத்து விடுவாளே?

தேடினேன் தேடினேன்
தத்தையை தூது விடலாம் என்று!
தத்தையிடம் சொல்லிவிட்டால்
தவறாமல் சொல்லிவிடும்.
தெரு ஜோசியனிடம் கிட்டிவிட்டால்
திண்டாட்டம் எனக்குத்தான்.

நன்றாக தேடினேன்
நண்பனை தூது விடலாம் என்று!
நன்றி கெட்ட நண்பனகிவிட்டால்?
நல்ல முறையில் தூது சொல்லுவானா?
நேற்றைய நண்பன் இன்று இல்லை
நம்பிக்கையும் இல்லை நண்பனிடம்
நண்பன் நாடகமடிவிடும் காலம் இது
நன் நண்பனையே தேட முடியவில்லை இன்னும்
நான் எப்படி தேடுவேன் தூதுவனை?

புலம்பாதே என்கிறது என் மனம்.
புரிய மறுக்கிறது அவள் மனம். ஆனால்
புரிந்துவிட்டது இப்போது.
புன்னகை கொள்வாய் என்ற நம்பிக்கையில் இந்த
புலம்பலை அனுப்புகிறேன்
புதுக் கவிதை விடும் தூதாக

இப்படிக்கு
இன்பமிங்கே குரு

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை

1 comment:

  1. தங்களது கவிதை மிகவும் அருமையாக உள்ளது...
    சரியான வார்த்தையை சரியான இடத்தில பொருத்தி
    கவிதைக்கு ஒரு அழகு கொடுதிருக்கீரீர்கள்....
    அருமை...

    ReplyDelete