Tuesday, February 1, 2011
நீ தான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்
கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே
கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே
நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்
நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தேகம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தே போனேன்
உன்னை மறக்க முடியவில்லை
கவலை துடித்த அன்பை மறந்தேன்
காட்டி கொடுத்த துரோகம் மறந்தேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை
எந்த பூக்களில் ஒளிந்திருப்பாய்
எந்த துருவிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன்
நான் தேய்ந்தே போகின்றேன்
கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தை காட்டிவிடு மூச்சை திருப்பி கொடு
தூக்கம் தந்து விடு
இல்லை தூக்கில் போட்டு விடு
நீ தான்
என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துகொண்டை
நீ தான்
என் இமைகளை திறந்து
உறக்கத்தை பறித்துக் கொண்டாய்
முகம் தெரியா பெண்ணைக் கண்டால்
நீ தான் என்று ஓடி பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தாள்
நீ தான் என்று திரும்பிடுவேன்
காற்றழுத்தம் அதிகம் ஆனால்
மேகம் மழையை தூவும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால்
உயிரும் மெல்ல உடைந்து விடும்
தூரம் தூரமாய் ஓடுகின்றாய்
துரத்தி துரத்தி நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னை பார்த்திடவே
நான் தினம் தினம் தொழுகின்றேன்
பார்த்து பழகிட தேடி வந்தேன்
பிரிந்து போகையில் எரிகின்றேன்
முகத்தை காட்டிவிடு மூச்சை திருப்பி கொடு
தூக்கம் தந்து விடு
இல்லை தூக்கில் போட்டு விடு
நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்
கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே
கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே
அருகில் நெருங்கினால் விலகிடுதே
என் நிழலும் தடுக்கிறதே
நீ தான்
என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்து கொண்டாய்
நீ தான்
என் இமைகளை திறந்து உறக்கத்தை பறித்துக் கொண்டாய்
- குருவின் இன்பமிங்கே
Neethan En Ithayathai Thirudi - Azhaippithazh - Song, Lyrics and Video
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment