ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சனை விரித்து
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சனை விரித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்க்கிடப் படித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்க்கிடப் படித்து
பாடம் சொல்லக் கூடாதோ
பார்வை ஒன்று போதாதோ
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
என்னிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டு
என்னிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை எனும் சிறையினில் பூட்டு
மங்கள இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
மங்கள இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
பார்வை தென்றல் தீயாக
காணும் இன்பம் நீராக
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
Mazhai Megam - Agaya Gangai Indru Manni Vanthathu Song, Lyrics and Video
| ||||||||||||
No comments:
Post a Comment